Sunday, October 25, 2009

சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மீண்டும் ‘உண்மைக்காய் எழுவோம்’ ஒன்றுகூடல்


சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மீண்டும் ‘உண்மைக்காய் எழுவோம்’ ஒன்றுகூடல் 2500ற்கும் மேற்ப்பட்ட மக்கள் எழுச்சியோடு கலந்து கொண்டு ஈழவிடுதலைக்காக குரல்கொடுத்தனர்.

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் 24.10.09 சனிக்கிழமை பேர்ன் பாராளுமன்றத்திற்கு முன்பாக உண்மைக்காய் எழுவோம் எனும் எழுச்சி ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மாலை 16.00 மணிக்கு பொதுச் சுடறேற்றலுடன் ஒன்றுகூடல் ஆரம்பமானது. தமிழீழத் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு சுவிஸ் நாட்டின் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு ஈகைச்சுடறேற்றலுடன் உரைகள் ஆரம்பமாகின.

இளையோர்களால் டொச் பிரெஞ் இத்தாலி போன்ற மொழிகளில் தற்போதை தமிழரின் அவல நிலைகுறித்து மக்களுக்கு பேச்சுகள் ஊடாகவம் துண்டுப்பிரசுரம் ஊடாகவும் எடுத்துக் கூறப்பட்டது. அதனைத் தவிர சர்வதேச மனித உரிமை மையத்தின் உபபொறுப்பாளரும் மனிதவுரிமைவாதியும் இனவொற்றுமை மையத்தின் தொடக்கப்பணிக்கு முக்கிய பங்கு வகித்தவரும் மற்றும் பொதுவடமை ஆவலருமான ஆழnமை ளுஉhடäபநட அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார்.


சமகால தாயக நிலவரம் மற்றும் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் மனித அவலங்களை விளக்கி சுவிஸ் அரசாங்கத்திற்கு இளையோர்களால் மனுவொன்றும் வெள்ளிக்கிழமையன்று கையளிக்கப்பட்டிருந்தது.

இளையோர்கள் பெருந்திரளாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் 2’500ற்கும் மேற்பட்ட சுவிஸ்வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றிருந்தனர். தமிழீழம் விடுவிக்கப்பட்டு தமிழ்மக்களின் அரசியல் உரிமைகள் உலகினால் அங்கீகரிக்கப்படும்வரை தொடர்ந்து போராடுவோம் என்றமுழக்கம் அரங்கில் மேலோங்கிநின்றது. மக்கள் மிகவும் எழுச்சியுடன் தேசியத்தலைவரின் புகைப்படங்கள் மற்றும் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறு காணப்பட்டனர். அத்தோடு தாயத்தில் நடந்தேறிய இனப்படுகொலைகளை சித்தரிக்கின்ற பாதாதைகள் மற்றும் முட்கம்பி வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் தமிழ் மக்களின் அவலங்களை சித்தரிக்கின்ற படங்கள் மற்றும் பாததைகளையும் தாங்கிநின்றனர்.

இறுதியாக இளையோர்களால் இன்றைய நிகழ்வின் பிரகடணம் வாசிக்கப்பட்டு கொடி இறக்கலுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.


Friday, October 23, 2009

டெல்லி சென்ற நாடாளுமன்ற குழுவில் திருமா கலந்துகொள்ளவில்லை


இலங்கை பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இந்திய பிரதமரையும் , காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து இலங்கை பயணம் குறித்து விவாதித்தனர்.

இந்த பயணத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இலங்கை சென்று அங்கு இருக்கும் உண்மை நிலையை எடுத்து கூறிய நாடாளுமன்ற உறுபினர்களில் ஒருவருமான தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்ளவில்லை ....

போர்க்குற்றவாளியாக ராஜபக்செவை விசாரணை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

சர்வதேச போர்க்குற்றவாளியாக ராஜபக்செவை அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை மெமோரியல்ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தலைமைவகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேசிய தொல். திருமாவளவன்,

"நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தும் கோரிக்கைகளே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதற்கும் சமீபத்திய இலங்கைக்கு பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற குழு சமர்பித்த அறிக்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

நாடாளுமன்ற அறிக்கையில் கூறுப்பட்டது அனைத்தும் உண்மையே. நாடாளுமன்ற குழுவின் பயணத்தைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த கோரிக்கைகளை விடுதலை சிறுததைகள் கட்சி முன்வைக்கிறது. அதே தருணத்தில் நான் இலங்கைக்குச் சென்று, எம்முடைய தொப்புள் கொடி உறவுகளைச் சந்தித்து, ஆறுதல் கூறியபோது, அங்குள்ளவர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்த கருத்து என்னவெனில், தம்மைத் தமது சொந்த இடத்திலேயே மீள குடியமர்த்தவேண்டும் என்பதே.

அதே தருணத்தில் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம். எக்காரணத்தை முன்னிட்டும், ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கென்று கூறி, இலங்கை அரசுக்கு நிதி உதவி அளிக்கக்கூடாது. காரணம் அவை யாவும் முறையாக ஈழத்தமிழர்களுக்குச் சென்றடைவதில்லை என்பதை கண்கூடாக நான் கண்டிருக்கிறேன். எனவே நேரடியாகத் தமிழ் மக்களுக்கு உதவுவதே நல்லது. தற்போது அறிவித்துள்ள 500 கோடி ரூபா நிதி உதவியை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கவில்லை" என்றார்

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் கா.கலைக் கோட்டுதயம், பொருளாளர் முகமது யூசுப், மாவட்டச் செயலாளர் கபிலன், தலைமை நிலையச் செயலாளர்கள் வன்னியரசு, பாவரசு, பாவலன், வீரமுத்து, இளஞ்செழியன், கிள்ளிவளவன், வழக்கறிஞர் பிரிவு எழில்கரோலின், செய்தித் தொடர்பாளர் ஆர்வலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் 5000 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.